
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் தமது வேலைத்தளங்களுக்கு செல்லும் பொருட்டு இன்று (18) முதல் பல விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த விசேட ரயில் சேவைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பதுளை, பெலியத்த, காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.