சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

பண்டிகை காலத்தில் வௌியூர் மற்றும் தூர இடங்களுக்கு பயணம் செய்வோர் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறும், இதன் மூலம் திடீர் விபத்துக்களை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த புத்தாண்டு காலப்பகுதியில், 28,000 முதல் 30,000 வரையிலானவர்கள் விபத்துக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், 75 முதல் 100 பேர் வரையில் உயிரிழந்ததாகவும் பதிவாகிய தரவுகள் இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும், பாதுகாப்பான இடங்களில் விடுமுறையை களிக்குமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply