
உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி நேற்று (17) வட மாகாணத்திற்கு வருகை தந்த வேளையில், யாழில் இருந்த சோதனைச்சாவடிகள் மாயமாகியுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏ9 வீதி மற்றும் பூநகரி வீதி என்பவற்றின் ஊடக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணம் மேற்கொண்டார்.
இதன்போது யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாழ் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியும், பூநகரி வீதியில் சங்குப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியும் தீடீரென அகற்றப்பட்டிருந்ததுடன், அங்கு எவரும் கடமையில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறதா அல்லது அரசாங்கம் காவல்துறையினரால் ஏமாற்றப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்கு முன்னரும் குறித்த சோதனைச்சாவடிகள் தளர்த்தப்பட்டு சிறிது காலங்களுக்கு பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.