யாழில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்- தமிழ், சிங்கள, முஸ்லிம் வீரர்களை ஒன்றாகக் காண வேண்டும் என்பதே எனது தொலைநோக்கு பார்வை!

தன்னுடைய ஐந்து ஆண்டுகால ஆட்சியில், யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைத்து, சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றை நடாத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி நேற்று (17) யாழுக்கு வருகை தந்த வேளையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து கூறுகையில்,

இலங்கை கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரியவுடனான அண்மைய சந்திப்பின் போது இந்த யோசனை தோன்றியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

“யாழில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்பில் என்ன செய்ய வேண்டும் என்று சனத் ஜெயசூரிய என்னிடம் கேட்டபோது, ​​எங்கள் முதல் ஐந்து ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்கவும், ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடாத்தவும் நிச்சயமாக முயற்சிக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச மைதானத்தை அமைப்பது என்பதும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் வீரர்களை ஒன்றாகக் காண்பது என்பதும் தனது தொலைநோக்குப் பார்வையில் அடங்கும் என்று ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply