தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் தொடரும் போராட்டம்!

வலி. வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினை அகற்றக் கோரி காணி உரியாளர்கள் இன்றைய தினம் (12) மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு வருடங்கள் கடந்தும் எமது இந்த உரிமை போராட்டத்துக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என தெரிவித்த போராட்டக்காரர்கள், எமது நிலத்தை மீட்கும் வரைக்கும் எமது போராட்டம் தொடர்ந்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தற்போதைய அரசும் தொடர்ச்சியாக தமக்கான நீதியினை வழங்க மறுத்துவருவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply