பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்- பிரதமரின் அறிவிப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது குறித்தும், புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் விரிவான ஆலோசனை நடாத்தும் எனவும் அவர் பதில் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply