
போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
குறித்த நபர் கடந்த 2013 ஏப்ரல் 7ஆம் திகதியன்று கொட்டாஞ்சேனை பகுதியில் 6.95 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின்னர் பிரதிவாதிக்கு எதிராக, சட்டமா அதிபர் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.