
இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவானது நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் நடாத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அரச வெசாக் விழாவானது “நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்” (‘ ஹஜெத மித்தே கல்யாண – ஹஜெத புரிசுத்தமே’) என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படவுள்ளது.
வெசாக் விழா கொண்டாட்டமானது, 2025ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப் பகுதியில் இடம்பெறவுள்ளது.