காங்கேசன்துறை சந்தி வரை சேவையை ஆரம்பிக்கவுள்ள 764ஆம் இலக்க தனியார் பேருந்து!

764ஆம் இலக்க தனியார் பேருந்து சேவை இனிமேல் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என, 764ம் இலக்க தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

வசாவிளான் – பலாலி வீதி விடுவிக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த பாதை விடுவிக்கப்பட்டமை சந்தோஷகரமான, வரவேற்கத்தக்க நிகழ்வு.

இதுவரையில் எமது பேருந்து சேவை வசாவிளான் வரையில் சேவையில் ஈடுபட்டது. இனிமேல் காங்கேசன்துறை வரைக்கும் சேவையில் ஈடுபடும். மீண்டும் அதே மார்க்கம் ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் என தெரிவித்தார்.

இந்த பயண சேவை தொடர்பில் படிப்படியாக எமது பேருந்து சேவை அட்டவணைகளை மாற்றியைப்போம்.

குறித்த பாதை பூட்டப்படுவதற்கு முன்பு காங்கேசன்துறை சந்தியில் இருந்து எமது தனியார் பேருந்து சேவை இயங்கியதை போலவே மீண்டும் எமது சேவைகளை மேற்கொள்வோம்.

அந்தோனிபுரம், மயிலிட்டி பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply