அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு குறித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (11) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நலன்புரி பயனாளிகள் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 1,737,141 பயனாளிகளுக்கு 12.63 பில்லியன் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயனாளி குடும்பங்களில் வசிக்கும் 70 வயதை கடந்த 580,944 நபர்களுக்காக, 2.9 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அதிகரிக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை உட்பட கொடுப்பனவுகளும் இந்த மாதம் முதல் ரூ. 3,000 இலிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply