
மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலை நெருங்க அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.