புத்தாண்டை முன்னிட்டு இயக்கப்பட்ட விசேட பேருந்து சேவை தொடர்பில் பல முறைப்பாடுகள்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இயக்கப்பட்ட விசேட பேருந்து சேவை தொடர்பில் 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பயணிகளிடமிருந்து 1955 என்ற துரித இலக்கம் மூலம் குறித்த முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களை வசூலிக்காதது தொடர்பாக 63 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும், டிக்கெட்டுகள் வழங்கப்படாதது குறித்தும் முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் புது வருடத்திற்கு பின்னர் விசாரணைகள் நடாத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply