
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வாக்களிக்க செல்லும் நபர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கையின் போது,
புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன்களைப் பயன்படுத்துதல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் அல்லது மது அருந்திவிட்டு வாக்குச் சாவடிக்குள் நுழைதல் ஆகிய செயற்பாடுகளை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.