கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு!

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித தலத்தின் மீது நேற்று (18) இரவு 7 மணியளவில் துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளது.

மனம்பிடிய, பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபரே குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தை நடத்தியவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் மனம்பிடிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் இருந்து, துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேக நபர், தேவாலயத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் பாதைக்கு சென்று இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தேவாலயத்தின் ஜன்னல் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தேவாலயத்தின் பாதிரியாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மனம்பிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply