
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
இஸ்ரேலின் பல பகுதிகளில், இன்று முதல் 26ஆம் திகதி வரை அங்கிருக்கும் இலங்கையர்களினால் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இலங்கையர்கள் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் யேமனில் ஹவுதி பயங்கரவாத அமைப்பால் ஏவப்பட்ட பல ஏவுகணைத் தாக்குதல்களை, இஸ்ரேலிய பாதுகாப்புப்
படைகள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால், யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.