
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை 72/2 பி செந்நெல் கிராமம் -02 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றையதினம் (18) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த நபர் வேலை நிமித்தம் மற்றுமொரு நபருடன் வயலுக்கு சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
உயிரிழந்தவரின் அருகில் வயல் வேலையில் ஈடுபட்டவரும் காயமடைந்த நிலையில், சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டார்.
பின்னர் குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மரண விசாரணையின் பின்னர், மின்னல் தாக்கத்தினால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.