மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதி விபத்து- கணவனும் மனைவியும் உயிரிழப்பு!

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ மஹா கடை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது நாயொன்று மோதியதில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் போது தெஹியத்த கண்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயது கணவனும் 21 வயதான மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.

கடவுச்சீட்டு பெறுவதற்காக அவர்கள் தெஹியத்தகண்டியிலிருந்து குருநாகலுக்கு பயணம் மேற்கொண்ட போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (21) காலை 6.30 மணியளவில், கலேவெல திசையிலிருந்து குருநாகல் திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த நாய் ஒன்றுடன் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி தூண் ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திய சாரதி, அவருடன் பயணித்த பெண் மற்றும் குழந்தையும் காயமடைந்து கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாரதியும் பெண்ணும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஒன்றரை வயது மகன் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply