புனித பாப்பரசரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்!

புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவிட்ட ஜனாதிபதி, வணக்கத்திற்குரிய பாப்பரசரின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதியின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசரின் கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply