
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்தும் செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே ஏற்படும் இரத்த சோகையை குறைக்கும் நோக்கில் இந்த திட்டத்தின் கீழ் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்துடன் தயாரிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி, பாடசாலை மாணவர்களின் மதிய உணவில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம், உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் அமுல்படுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.