கண்டிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு யாத்ரீகர்களின் நலன் விசாரித்த ஜனாதிபதி!

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்று வரும் புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிடுவதற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ள நிலையில், அவர்களை சந்திப்பதற்காக அநுர குமார திசாநாயக்க நேற்று இரவு (24) அப்பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிட நீண்ட வரிசையில் காத்து நிற்கும் மக்களின் தேவைகளை கேட்டறிவதற்காகவும், நலன் விசாரிப்பதற்காகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு கண்டி நகரின் பல இடங்களுக்குச் சென்றுள்ளார்.

இதேவேளை, வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நேற்றிரவு தன்சல் (உணவு தானம்) வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ தலதா வழிபாடு இன்று (25) எட்டாவது நாளாக இடம்பெறவுள்ளதுடன், குறித்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீ தலதா புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிடுவதற்கு ஏற்கனவே 400,000 யாத்திரிகர்கள் கண்டிக்கு வருகை தந்துள்ளதால், பொதுமக்களின் நலன்கருதி கண்டிக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply