
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியுள்ளது.
கொலையுடன் சம்பத்தப்பட்ட பிரதான சந்தேகநபரை, மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் இன்றையதினம் ஆஜர்படுத்திய வேளையில் நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.