
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பெண் இறந்தமைக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.