கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாரிய நிதி மோசடி- விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உயர்கல்வி அமைச்சு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிய மாகாபொல புலமைப்பரிசில், விளையாட்டுத்துறை, ஆய்வு மகாநாடுகள், மற்றும் அபிவிருத்திகளில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள் ஜனாதிபதிக்கு முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய, ஜனாதிபதி செயலகம் உயர்கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து, குறித்த நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவிற்கு உயர்கல்வி அமைச்சு கோரியுள்ளது.

அதன்படி இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply