முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி- மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply