
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி அவர் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 வருடங்கள் பணியாற்றியுள்ளதோடு, அவரது பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாகவும் 15 வருடங்கள் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.