யாழில் இராணுவம் வசமிருந்த 40 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த ஒரு தொகுதி காணிகள் இன்றைய தினம் (01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத், யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

அதன்படி வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும், மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் நிலங்களும், திக்கம் பகுதியில் ஐந்து ஏக்கர் காணி நிலமுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஸ்ரீமோகன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், பருத்தித்துறை பிரதேச செயலர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply