
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் மாணவன் பகிடி வதையால் விபரீத முடிவை எடுத்து உயிர் மாய்துள்ளார் என்ற செய்தி நிரூபணம் ஆனால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று (01) அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்தமை குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்ததும், பல்கலைக்கழக நிர்வாகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.