
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இளங்கசிங்க இது தொடர்பில் கருத்து வௌியிடுகையில்,
இந்த துயர சம்பவத்திற்கு பகிடிவதையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவத்தால் தங்களது விரிவுரையாளர்கள் சம்மேளனம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.