
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவானது சிரேஷ்ட பேராசிரியர் ஏ.ஏ.வை. அமரசிங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பேராசிரியர் கபில ரத்நாயக்க மற்றும் சட்டத்தரணி வை. எஸ். சந்திரசேகர் ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவனின் மரணம் தொடர்பிலான உண்மைகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவுகளை உடனடியாக வழங்குமாறு குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.