மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலை சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மரண சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்த நபரை, மற்றொரு நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதன் காரணமாக, அவர் படுகாயமடைந்து கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும், சந்தேக நபருக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வந்த தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீகிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply