
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (03) வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், மே 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரையில் இந்த பயணம் அமையவுள்ளது.
அதற்காக, ஜனாதிபதி இன்றிரவு (03) நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமையவுள்ள ஜனாதிபதி அனுரவின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.