அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு- இளைஞன் பலி!

கல்கிஸை – கடற்கரை வீதியில் இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் ​மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply