நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி,

மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்

மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்,

மு.ப. 11.30 – பி.ப. 5.00 பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன,

1. இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் அரச தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகள் அனுபவிக்கின்ற சிறப்புரிமைகளை பொருத்தமான வகையில் குறைத்தல் (கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி)

2. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி மற்றும் விநியோகத்தின் போது அரச துறையின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல் (கௌரவ ரோஹண பண்டார)

3. கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல் (கௌரவ சமிந்த விஜேசிறி)

4. இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வதற்கு வீடு ஒன்றை வழங்குதல் (கௌரவ ரவி கருணாநாயக்க)

6. பொது போக்குவரத்து தர நிர்ணயங்களுக்கமைவான பேரூந்துகளை மாத்திரம் நாட்டுக்கு கொண்டு வருதல் தொடர்பான சட்டங்களை ஆக்குதல் (கௌரவ ரவீந்திர பண்டார)

7. இலங்கையில் “அபிவிருத்தி முன்மொழிவுகள்” என்ற பெயரில் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள எனினும் எவ்வித பயன்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாத அனைத்து கட்டிடங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் (கௌரவ லால் பிரேமநாத்)

பி.ப. 5.00 – பி.ப. 5.30 சபை ஒத்திவைப்பின் போதான கேள்விகள்

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply