
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய டபிள்யூ.ஏ.டி.என். மஹகுமார என்ற அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக வெலிசர மார்பு நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (09) காலை அவர் உயிரிழந்தார்.
இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.
உதவி பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்து, இலங்கையின் பல பகுதிகளில் பணியாற்றிய இவர், சுமார் 15 ஆண்டுகள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார்.
உயிரிழந்த அதிகாரியின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.