அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவி விலகல்!

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய தம்மிக்க தசநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, அவரது ராஜினாமாவை அந்த சபை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய தம்மிக்க தசநாயக்க 25, மே 2023 அன்று அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இருப்பினும், பின்னர் அதே ஆண்டில் அரசியலமைப்பு சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply