போராட்ட குப்பைகளை அகற்றிய இளைஞருக்கு கிடைத்த பரிசு
அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞரை பலர் பாராட்டியதுடன், கார், கல்வி உதவித்தொகையையும் பரிசாக அளித்துள்ளனர். அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில்…
அனைவரும் மூன்று அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் பொதுவெளியில் மூன்று அடுக்குகள் கொண்ட துணி முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது….
பல நாடுகளுக்கும் பரவும் அமெரிக்க போராட்டம்
ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டம், உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவ துவங்கியுள்ளது. அமெரிக்காவில், போலீஸ்காரர் ஒருவர் தன் முழங்காலால் கழுத்தை…
பாக்கிஸ்தான் அரசியல் தலைவர்கள் மீது அமெரிக்க பெண் பாலியல் குற்றச்சாட்டு
பாக்கிஸ்தான் முன்னாள் அமைச்சர் ரஹ்மான் மாலிக், தன்னை பலாத்காரம் செய்ததாக சிந்தியா டி.ரிச்சி என்ற அமெரிக்க பெண் சாகச கலைஞர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த…
வடகொரியா – தென்கொரியா மோதல்
தென் கொரியா எல்லை தாண்டி வந்து தனக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வீசுவதை நிறுத்த தவறினால் அந்நாட்டுடன் 2018ல் செய்து கொண்ட ராணுவ ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும்…
முகாமைத்துவ மீள் சுழற்சி செய்யும்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து
காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகளை முகாமைத்துவ மீள் சுழற்சி செய்யும் நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்….
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை பிரதேசச் செயலாளர் தனியார் நபர்களுக்கு வழங்கி குறித்த இடங்களில் நிறந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக விடத்தல் தீவு மேற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். குறித்த விடையம் தொடர்பாக விடத்தல் தீவு மேற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கம் நேற்று சனிக்கிழமை (6) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,, விடத்தல் தீவு கிராமத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை பிரதேசச் செயலாளர் தனியார் நபர்களுக்கு வழங்கி குறித்த இடங்களில் நிறந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த செயற்பாட்டினால் எமது கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. மேலும் எமது கிராமத்தில் வசிக்காத நபர்களுக்கும் குறித்த பகுதிகளில் காணி வழங்கப்பட்டு கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையின் காரணமாக எமது கிராமம் பாதீப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எமது கிராமத்தில் உள்ள குறித்த காணி வளங்களை எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக பயன் படுத்துவதற்கும், தொழிலாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து அவர்கள் இடையூறுகள் இன்றி அவர்கள் தொழிலை மேற்கொள்ளுவதற்கும், எமது கரையோர பகுதிகளை அண்டிய காணிகளை எமது சங்கத்தின் பொறுப்பில் பரமாறிக்கும் வகையில் ஆவணம் செய்து தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். என குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனை வினவிய போது,,,,. குறித்த பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக மீன் வாடிகள் காணப்பட்டது.தற்போது புதிதாக வந்த சிலர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்று வருகின்றனர். சட்ட அடிப்படையில் காணிக்கான முழு அதிகாரமும் பிரதேச செயலகத்திற்கே உள்ளது. கடற்கரையை அண்டிய பகுதியாக இருந்தால் பிரதேசச் செயலகத்தினால் ஒரு வருடத்திற்கு குத்தகை என்ற அடிப்படையில் கொட்டு வாடி அமைக்க வழங்க முடியும். நிறந்தர கட்டிடம் அமைக்க முடியாது. ஆனால் தற்போது குறித்த பகுதியில் நிறந்தர கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக எனக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை. பிரதேசச் செயலகத்திற்கு குறித்த காணியின் அதிகாரம் காணப்படுகின்றமையினால் கடல் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்தே நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.வருட குத்தகைக்கு வழங்க முடியும்.ஆனால் குறித்த பகுதியில் நிறந்தர கட்டிடங்கள் எவையும் அமைக்க முடியாது.
கல்முனை அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள பல சரக்கு விற்பனை நிலையத்தில் இன்று (07) பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு கடைகளில்…
விடத்தல் தீவு மேற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கம் கடற்தொழில் அமைச்சருக்கு மகஜர்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை பிரதேசச் செயலாளர் தனியார் நபர்களுக்கு வழங்கி குறித்த இடங்களில்…
பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிப்பு
மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று ஞாயிற்றக்கிழமை (7) மதியம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நகர…
சிறைக்கு அனுப்ப வேண்டியவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள் மக்கள்
“தற்போது நாட்டின் சிவில் சட்டத்தை மீறிச் செயற்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஏற்கனவே செய்த குற்றங்களுக்காகச் சிறையில் இருக்க வேண்டியவர்கள். அப்படிப்பட்டவர்களைத்தான்…