சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் (LKI) நிர்வாக இயக்குநராக ரவிநாத ஆரியசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர், சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிறுவகத்தின் முகாமைத்துவ சபையின் தலைவராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, இலங்கை வெளிவிவகாரச் சேவையின் அதிகாரியாக இருந்த இவர், இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளராகவும், அமெரிக்கா, பெல்ஜியம், லக்சம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் இலங்கையின் தூதுவராகவும், ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டமும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டமும் பெற்றவராவார்.