தமிழர் தேச விடுதலைக்காக போராடி தன் இன்னுயிரை தற்கொடை செய்த மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமானது கரும்புலிகளின் நாள்.
வருடம் தோறும் ஜூலை 5ஆம் திகதி கரும்புலி நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 ஆம் ஆண்டு யூலை 5ம் திகதி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அன்று தொட்டு பல தற்கொடைத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன அவ்வாறு தேச விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்காக ஜூலை 5ம் திகதி நினைவேந்தல் கடைப்பிடிக்கப்படுகின்றது.
முதல் கரும்புலி கப்டன் மில்லர் யாழ்ப்பாணத்தின் துன்னாலை தெற்கு, கரவெட்டியில் 01.01.1966 ஆம் ஆண்டு பிறந்து, 05.07.1987 ஆம் அன்று வீரச்சாவு அடைந்தார்.
இவ்வாறு வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.