2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மாதிரி விண்ணப்பப் படிவம் www.moe.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் தங்கள் பிள்ளைகளை அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில்  சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மாதிரி படிவம் மற்றும் அறிவுறுத்தல்களின்படி தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பதிவுத் தபாலில், ஓகஸ்ட் 18, 2023 க்கு முன், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. .

அனைத்து தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் இது ஜூன் 30, 2023 வரை செல்லுபடியாகும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply