
முல்லைத்தீவு – நாகசோலை வனப்பகுதியில் அனுராதபுரம் யுகத்திற்கு சொந்தமான பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் சிலரால் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம் யுகம் நிறைவடைந்த காலமான கிருஸ்து வருடம் 946 முதல் 954 ஆகிய யுகத்தில் அதனை ஆட்சி செய்த 4 ஆவது உதய மன்னருக்கு சொந்தமான பழமைவாய்ந்த கல்வெட்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில் குருந்த விகாரை என்ற பெயரில் அறியப்படும் இடத்தில் இருந்து குறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், புதையல் திருடர்களால் கல்வெட்டு இருந்த இடத்தில் அகழ்வும் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த வளாகம் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக 78 ஏக்கர் தொல்பொருள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.