பைசர் தடுப்பூசி நிர்வகிப்பு அதிகாரம் இராணுவத்திடம்

கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை நிர்வகிக்கும் அதிகாரம் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் உட்பட பல பகுதிகளில் இருந்து பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி நிர்வகிப்பு தொட்பில் பல்வேறு முரண்பாடுகள் பதிவாகிய பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது.

எனவே இதுபோன்ற விடயங்களை கருத்தில் கொண்டு, பைசர் தடுப்பூசி நிர்வாகம் எதிர்காலத்தில் இராணுவத்தால் வழிநடத்தப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

சாதாரண நடைமுறையின் கீழ் தடுப்பூசி பெற தகுதியற்ற எந்தவொரு தனிநபருக்கும் பைசர் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir