இனப்படுகொலை தொடர்பான கனடாவின் பிரகடனம் – சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை!

கனடாவின் அரசியல் நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என முள்ளிவாய்க்கால் 14 ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கண்டனப் பிரகடனம் ஒன்று வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் எதிர்வரும் காலங்களில் அங்கீகரிக்கக்கூடும் என  நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்ற தேசிய பார்வை தொடர்பான கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே  அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தான் தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், ஆதாரங்கள் அற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கனடா விதித்துள்ள பயணத்தடைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினருக்கு கடும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சவாலுக்கு உட்படுத்தாமல் தொடர அனுமதித்தால்,  தனிநாடு குறித்த கோரிக்கைகளை நியாயப்படுத்தும் நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply