மன்னம்பிட்டி பேருந்து விபத்தில் பல்கலை மாணவர்களும் உயிரிழப்பு!

பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் நேற்றிரவு விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததோடு, 41 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் தொழிநுட்ப பீடத்தில் கல்வி கற்றவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply