ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான, நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறித்த கோரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பில், தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மனுத்தாக்கல் செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply