விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் கைது!

சிங்கராஜ வனப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டு, உடுகம நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதவான் அவர்களுக்கு ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய பிரஜைகள் மூவரும் அண்மையில்  சிங்கராஜ வனப்பகுதியில்  தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்துக்கொண்டிருந்த போது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ வன அதிகாரிகள் குழுவினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply