மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயார் – மேர்வின் சில்வாவிற்கு சிறீதரன் பகிரங்க சவால்!

பௌத்த விகாரைகளை தமிழர்கள் இடித்தழிக்கப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என மேர்வின் சில்வா கருதுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தான் வடக்கு, கிழக்கில் விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வாவின் இந்தக் கனவு பலிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஆயுதங்களை தங்களுடைய கைகளில் திணிக்க வேண்டுமென மேர்வின் சில்வா, சரத் வீரசேர மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்கள் நினைக்கின்றார்கள் என்றால் அப்படியொரு சந்தர்ப்பத்தை தாங்கள் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 1985இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொடுத்த செவ்வியொன்றில் “நாங்கள் ஆயுதங்களை விரும்பி தூக்கவில்லை. எங்களுடைய மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டது” என்று கூறியிருந்தார் என்பதையும் அதன் போது நினைவூட்டியுள்ளார்.

தமிழர்களின் தலையை கொய்தால் தாம் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என மேர்வின் சில்வா கருதுவது இந்த நவீன உலகத்திற்கு பொருந்துமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply