இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்கள் இருவரும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தபோது, இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த இரண்டு பெண்களும் இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த இரண்டு இலங்கை பெண்களும் 44 மற்றும் 50 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.