உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பிலான அறிவிப்பு!

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சித்திரை புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31, வரை நாடு முழுவதும் 2312 பரீட்ச நிலையங்களில் நடைபெற்றதுடன், செயல்முறை பரீட்சையானது கடந்த பெப்ரவரி 08 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெற்றது.

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 333,183 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள், 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகள் ஆவர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply