120 வகையான மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு!

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்து உற்பத்தி தொடர்பிலான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதும், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கேனும் தற்போதைய சுகாதார அமைச்சர் தயாராக இல்லை என அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply