
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்பதிவு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கத்தில் பேருந்துகள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சாரதியொருவரின் கடமை நேரம் 14 மணித்தியாலங்களுக்கு மேற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மற்றுமொரு சாரதியை பணி அமர்த்த வேண்டும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை, விசேட சுற்றுலாப்பயணங்களுக்கு ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.